சிங்கப்பூர் விலைச் சூத்திரத்திற்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிப்பு!
Saturday, May 12th, 2018
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகவே எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் எரிபொருள் விலைச் சூத்திரத்தைப் பயன்படுத்தி இரண்டு மாதங்களுக்கொருமுறை எரிபொருள் விலைகள் மீளாய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விலைகளில்மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தை விலைகளுக்கேற்ப விலைகளில் அதிகரிப்பு அல்லது வீழ்ச்சி காணப்படவே செய்யும். விலை வீழ்ச்சி ஏற்படுமாயின் விலைச் சூத்திரத்தில் அதன் பிரதிபலிப்புதென்படும்.
2019 ஆம் ஆண்டு முதல் காலாண்டுப் பகுதியில் எரிபொருள் விலைகளில் வீழ்ச்சி ஏற்படவுள்ளதால் விலைகளில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்தை அமைச்சரவை அங்கீகரித்ததைத் தொடர்ந்தே அரசாங்கம் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக ஊடகவியலாளர்சந்திப்பின்போது அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
|
|
|


