நாடாளுமன்றத் தேர்தலில் கலப்பு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Thursday, October 19th, 2023

நாடாளுமன்றத் தேர்தலில் கலப்பு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது, திருத்தம் செய்வது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாநளுமன்ற வாரத்தில் மீண்டும் அவ்வாறானதொரு கலந்துரையாடலை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், கலந்துரையாடலின் முடிவில் தயாரிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான யோசனைகளை அமைச்சரவையில் முன்வைத்த நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.

நாடாநளுமன்றத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி, சட்டத்தரணி சாகர காரியவசம், மஹிந்த அமரவீர, ஏ.எல்.எம். அதாவுல்லா , எஸ். சந்திரகாந்தன் , ஏ. அரவிந்த் குமார், எம். ராமேஸ்வரன் ஆகிய நாடாநளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், றிசாத் பதியுதீன் , மனோ கணேசன், ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அங்கஜன் இராமநாதன், ஷான் விஜயலால் டி சில்வா , சரதி துஷ்மந்த , டலஸ் அழகப்பெரும , ஜயந்த சமரவீர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, உதய கம்மன்பில, வணக்கத்திற்குரிய அதுரலியே இரத்தின தேரர், அசங்க நவரத்ன, வீரசுமண வீரசிங்க, கெவிந்து குமாரதுங்க ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: