சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

Friday, March 9th, 2018

இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகால நிலை அவசியமின்றி நீடிக்கப்படக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம்வலியுறுத்தியுள்ளது.

அவசரகால நிலையின் கீழ் வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்றும் ஐ.நா சபைக்கு இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினர்தொடர்பாக வழங்கிய உறுதிமொழிகளை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர்மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்தும் அபரிமித அதிகாரங்களை வழங்கும் ஒன்றாக அது அமைந்துவிடக்கூடாது என்று அவர்  வலியுறுத்தியுள்ளார்.

Related posts: