ரஷ்யாவிலிருந்து உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை!

Thursday, June 27th, 2019

ரஷ்ய தயாரிப்பு உலங்குவானூர்திகளை இலங்கை கொள்வனவு செய்யும் சாத்தியங்கள் உள்ளதாக இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

மொஸ்கோவில் நடைபெறும் “இராணுவம்-2019“ பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஊடகத்திடம் கருத்து வெளியிட்ட போதே இதனைக் குறிப்பிட்டார்.

“ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்காக உலங்குவானூர்திகள் எமக்குத் தேவைப்படுகின்றன.

நாங்கள் தென் சூடான் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகியவற்றில் எமது உலவங்குவானூர்திகளை பணிக்கு அமர்த்தியுள்ளோம். எனவே எமக்கு மேலதிக உலங்குவானூர்திகள் தேவைப்படுகின்றன.

ரஷ்யாவின் எம்.ஐ17 மற்றும் எம்.ஐ2 4 உலங்குவானூர்திகள் மிகச் சிறந்தவை என்பது நன்றாகவே தெரியும். எனவே, அவற்றில் மேலும் சிலவற்றை கொள்வனவு செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எவ்வாறாயினும், பெரிய அளவிலான இராணுவ கருவிகளை வாங்குவதற்கு, விற்பனையாளரிடமிருந்து நிதி உதவியை உள்ளடக்கிய ஒரு உடன்பாடு குறித்து பேச்சு நடத்த வேண்டும்.

இலங்கை ஒரு சிறிய நாடு. எமது பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு மிகவும் வரையறுக்கப்பட்டது. மிகப் பெரியளவிலான கொள்வனவுகளில் ஈடுபடும் போது, கடன் அடிப்படையிலோ, கொடை பணியாற்ற வேண்டியுள்ளது, எனவே இதுகுறித்துப் பேச வேண்டும் ” என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

Related posts:

பொது நினைவுத் தூபிக்கு மட்டுமே அனுமதி: சுயேட்சைக் குழுவின் தீர்மானத்தை தூக்கி எறிந்தது வல்வெட்டித்து...
இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பது தொடர்பில் ஒரு வாரத்தில் அறிக்கை - ஸ்ரீ ஜயவ...
5G தொழில்நுட்ப முறை குறித்து அவதானமாகவே இலங்கை செயல்படும் - இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!