தகவலறியும் உரிமை தொடர்பாக பாட விதானங்களிலும் சேர்க்கப்படும் – ஆணைக்குழுவின் பணிப்பாளர்!

Sunday, May 13th, 2018

அரசாங்க பாடசாலைகளில் தகவலறியும் உரிமை அது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் மாணவர்களின் பாடவிதானங்களில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சுடன் இணைந்து தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருவதாக மேற்படி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க அறிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரணதரம், உயர்தரம் தொடர்பான வகுப்புகளில் 2020 முதல் தகவலறியும் உரிமை தொடர்பான அத்தியாயங்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது. க.பொ.த. சாதாரண தரத்தில் குடியுரிமைக் கல்வி பாடத்திலும், க.பொ.த. உயர்தர வகுப்புகளில் ஊடகக் கல்விப் பாடத்திலும் தகவலறியும் உரிமை தொடர்பான அத்தியாயம் சேர்த்துக் கொள்ளப்படும்.

இதேபோன்று அரசாங்க பொது பரீட்சைகள் அரச சேவையாளர்களுக்கான வினைத்திறமை காண் பரீட்சை என்பவற்றிலும் தகவலறியும் உரிமை தொடர்பான வினாக்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது. அரச சேவை உத்தியோகத்தர்களின் தகவலறியும் உரிமை தொடர்பான அறிவை விருத்தி செய்யும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்தால் இணைய வழி மூலம் டிப்ளோமா பாட நெறியொன்று இவ்வாண்டில் நடத்தப்படவுள்ளது. தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்தி ஆவணங்களையும் தகவல்களையும் அரச உத்தியோகத்தர்கள் பெற்றுக் கொள்ள ஏதுவாக அரச தாபன விதிக் கோவையில் புதிய அத்தியாயம் ஒன்றை இணைத்துக் கொள்ளவும் பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

Related posts: