தப்பியோடியவர்களுக்கு மீண்டும் ஓர் சந்தர்ப்பம்!

Monday, October 16th, 2017

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீளவும் பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்திலிருந்து முறையாக விலகாது விடுமுறை பெற்றுக்கொள்ளாது சேவையை விட்டு விலகிச் சென்றவர்கள் மற்றும் தப்பியோடியவர்களுக்கு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ன கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் முப்படையைச் சேர்ந்த 8843 படைச்சிப்பாய்களும் 34 அதிகாரிகளும் சரணடைந்துள்ளனர்.

இவ்வாறு சரணடைந்தவர்களில் 80 வீதமானவர்கள் முறையாக இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களை நீக்குவதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த 13ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் அடிப்படையில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 6719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படையினருக்கு மீளவும் ஓர் பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட உள்ளது.அத்துடன்இ நாளை இந்தப் பொது மன்னிப்புக் காலம் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: