கோப்குழுவின் தலைவரை பதவி விலக வலியுறுத்துகிறது UNP.!

Friday, November 24th, 2017

கோப்குழுவின் தலைவர் பதவியிலிருந்து சுனில் ஹந்துன்நெத்தி பதவி விலகவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் துஸார இந்துநில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன் போது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சர் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேராவின் பரிந்துரைக்கு அமைய கோப் குழுவின் தலைவராக சுனில் ஹந்துன்நெத்தி நியமிக்கப்பட்ட நிலையில் கோப் குழுவில் அங்கம் வகிப்பதற்கு அஜித் பி பெரேரா தகுதியுடையவர் இல்லை எனில் சுனில் ஹந்துன்நெத்திக்கும் தகுதி இல்லை என துஸார இந்துநில் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: