அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம் – ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களின் செயலாளர்களும் செயற்படுவர் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Thursday, May 12th, 2022

அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் செயற்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் இரண்டு மேலதிக ஆணையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரப் பிரதானியான கே.டி.எஸ். ருவன் சந்திர அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாகவும் மேலதிக ஆணையாளர்களாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் ரோஹன புஸ்பகுமார மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதன் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பொதுமக்களால் அரச நிறுவனங்களிடம் கையளிக்கப்படும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் செயற்பாட்டை நெறிப்படுத்...
யாழ் மாவட்டத்தில் 157 வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு - 150 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 7...
உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சி – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்- - யாழ். ...