மாணவி வித்தியா கொலை வழக்கு : மரபனுப்பரிசோதணை அறிக்கையால் சர்ச்சை!

Thursday, July 14th, 2016

மாணவி வித்தியா கொலைச் சந்தேக நபர்களின் மரபனுப்பரிசோதனை அறிக்கை உரிய இடத்தில் உரிய சந்தர்ப்பத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்று ஊர்காவற்றை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலை வழக்கு நேற்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கின் 12 சந்தேக நபர்களும் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன் போது மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த சந்தேக நபர்களின் ஒருவர் மரபணுப்பரிசோதனைக்காக எங்களிடம் இருந்து இரண்டு முறை இரத்த மாதிரிகள் சேகரிக்ககப்பட்டிருந்தன. நீண்ட காலத்தின் பின்னர் அவ்மரபணுப்பிசோதனை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்நிலையில் அவ்வறிக்கை மன்றிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிவித்தால் யார் குற்றவாளிகள் என்பது தெரிந்துவிடும். எனவே மரபணுப்பரிசோதனை அறிக்கையின் முடிவுகளை தெரிவிக்க வேண்டும் என்று நீதவானிடம் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த நீதவான் – மரபனுப்பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டிய இடத்தில், உரிய சந்தர்ப்பங்களின் போது தெரிவிக்கப்படும், அவ்வறிக்கையின் முடிவுகளை இப்போது பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று கூறி சந்தேக நபர்களினால் மன்றில் கோரப்பட்ட விடயத்தினை நிராகரித்தார்

Related posts: