சார்க் மாநாட்டை ஒத்திவைக்க  இலங்கை ஆதரவு!

Friday, September 30th, 2016

எதிர்வரும் நவம்பரில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பு இல்லாமல் தாம் இந்த மாநாட்டில் பங்கேற்கமுடியாது என்று இலங்கை,நேபாளத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

19வது சார்க் மாநாடு எதிர்வரும் நவம்பர் 9ஆம் 10ஆம் திகதிகளில் பாகிஸ்தானில்நடைபெறவுள்ளது.எனினும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிப்பு காரணமாக இந்த மாநாட்டை புறக்கணிக்க நான்கு நாடுகள் தீர்மானித்துள்ளன. இந்தியா, பங்களாதேஸ், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளே இவையாகும்.

சார்க் மாநாட்டுக்கு தற்போது தலைமை தாங்கும் நேபாளத்துக்கு குறித்து நான்கு நாடுகளும் இதுதொடர்பில் அறிவித்துள்ளன. எனினும் மாநாட்டில் பங்கேற்பது குறித்து நேபாளம் இன்னும் தீர்மானிக்கவில்லை. இந்த நிலையில் இந்தியாவின் பங்கேற்பு இல்லாமல் தாம் இந்த மாநாட்டில் பங்கேற்கமுடியாது என்று இலங்கை,நேபாளத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mangala-Samaraweera

Related posts: