கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை தூதரகம் ஆராய்வு!

Sunday, May 6th, 2018

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அவதானம் செலுத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை 131 இலங்கையர்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நோக்கி, தாங்கி கப்பல் ஒன்றில் பயணிக்க முற்பட்ட வேளை மலேசிய அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களில் 41 பேர் ஐக்கிய நாடுகளின் ஏதிலி பேரவையினால் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டுள்ளனர்.அத்துடன் அவர்களுள் 4 பேர் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி உள்ளனர்.

கைதான இலங்கையர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இந்த ஆட்கடத்தலுக்கு உதவியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சேர்ந்த 15 பேர் கைதாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: