கூட்டுறவுச் சங்கங்களில் புதிதாக அங்கத்தவர்களை இணைப்பதற்கான பணிகள் தீவிரம்!

Tuesday, April 10th, 2018

கூட்டுறவுப் பாலம் என்ற தொனிப் பொருளில் கூட்டுறவுச் சங்கங்களில் அங்கத்தவர்களைப் புதிதாக இணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

கூட்டுறவுப் பாலத்தின் ஊடாக ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் புதிதாக அங்கத்தவர்களை இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் தெரவித்தார்.

சகல கூட்டுறவு அமைப்புக்களிலும் நடப்பு ஆண்டில் கூடுதலான அங்கத்தவர்கள் இணைக்கப்படுவார்கள். சங்கங்களில் அங்கத்தவர்களை இணைத்துக் கொள்வதற்கு அதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும்.

கூட்டுறவுச் சங்க கிளை நிலையங்கள் ஊடாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களை இணைத்துக் கொள்வதற்கு கிளைக்குழுக்கள் முன்வர வேண்டும் என்று ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தில் கூட்டுறவு பரிணமிப்பு வேளாண் திட்டம் ஊடாக கூட்டுறவு கொடி ஏற்றும் நிகழ்வு சகல கூட்டுறவுச் சங்கங்களிலும் ஒவ்வொரு நாளும் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது கூட்டுறவுக் கீதம் இசைக்கப்பட்டு கூட்டுறவு கொடிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இடம்பெற்ற பின்னரே பணிகள் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வை சங்கங்களின் பணியாளர்கள் சுழற்சி முறையில் செய்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts: