காலியில் புதிய சுற்றுலா வலயம் ஸ்தாபிப்பு!
Sunday, March 25th, 2018
காலி மாவட்டத்தின் ரத்கம – அங்குரல பிரதேசத்தில் புதிய சுற்றுலா வலயமொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனதெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றுலா வலயத்தை 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைப்பதன் மூலம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா துறை சார்ந்தோருக்கு கூடுதல் வருவாய் மார்க்கங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திட்டம் அமுலாக்கப்படுகிறது. இதற்கான அளவீட்டு நடவடிக்கைகளும் பூர்த்தியாகி உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மின்சார வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு மக்களுக்கு ஊக்கமளிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக...
ஜனாதிபதி இராஜினாமா செய்தால் நாடு மேலும் சின்னா பின்னமாகும் - இடைக்கால அரசாங்கமே நெருக்கடிக்கான ஒரே த...
பெப்ரவரி மாத பிற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை!
|
|
|


