காலநிலை சீர்கேடு : 28 பேர் உயிரிழப்பு!
Friday, May 26th, 2017
நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. மழையினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர்வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் மலைநாட்டுப் பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை பெய்து வரும் அதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் புயல் காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வு கூறியுள்ளது.
Related posts:
பொலிஸாரினால் கொழும்பு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை- சிங்கப்பூர் இடையே சட்ட விரோத வர்த்தக நடவடிக்கைகளை தடுக்க உடன்படிக்கை!
உகாண்டா தலைநகரை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல்!
|
|
|


