கலைஞர்களுக்கு உதவும் ஓய்வூதிய கொடுப்பனவு முறை!

Monday, November 27th, 2017

கலைஞர்களுக்கு உதவும் ஓய்வூதிய கொடுப்பனவு முறையொன்று நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக  உள்நாட்டு அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நளீந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 2016 ஆம் ஆண்டில் 44 இலட்ச ரூபாவும். 2017 ஆம் ஆண்டில் ஆயிரத்து 50 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 31 கலைஞர்கள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கலைஞர்களின் பங்களிப்புடனான  இந்த கொடுப்பனவை பெற விரும்பும் கலைஞர்கள் இதற்கென விண்ணப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜோன் டி சில்வா கலையரங்கத்தின் புனரமைப்பு பணிகள்; பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதன் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், இரண்டாம் கட்டப் பணிகளுக்காக 13 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது என்ற வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன மேலும் கூறினார்.

Related posts: