நாட்டின் பல பாகங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, March 3rd, 2022

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றர் வரையில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அதற்கு அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் நிலை கொண்டிருந்த தாழமுக்கப் பிரதேசம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து நாளை (4) முதல் எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகின்றது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: