டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுயபரிசோதனை அட்டை!

Tuesday, February 6th, 2018

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் வகையிலான சுயபரிசோதனை அட்டை குடியிருப்பாளர்களுக்கு சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்பட்டு வருகிறது.

மீசாலை கிழக்கு மற்றும் மீசாலை மேற்குப் பகுதிகளில் கடந்த வாரம் இடம்பெற்ற சிறப்பு டெங்குக் கட்டுப்பாடு பரிசோதனையின் போது இந்த அட்டைகள் அனைத்துக் குடியிருப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

குடியிருப்பாளர் வாரம் ஒருமுறை தமது காணி மற்றும் குடியிருப்பு ஆகியவற்றைப் பார்வையிட்டு அங்குள்ள நிலைமைகளை அட்டையில் தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.

இந்த அட்டை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் ஆகியோரால் மேற்பார்வை செய்யப்படும். குடியிருப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட வாராந்த பரிசோதனை அறிக்கையில் வழங்கப்படும் தகவல்களுக்கும் தள நிலைமைக்கும் இடையே வேறுபாடு காணப்படின் அந்தக் குடியிருப்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பகுதியினர் தெரிவித்தார்.

Related posts:


இன்றுமுதல் மேலும் 10,000 பட்டதாரிகளிற்கு அரச நியமனம் - அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரே தற்போதைய அபாயகரமான நிலை குறைவடையும் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந...
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி நீக்கம் - பதவி நீக்கப்படுவது இதுவே முதன் முறை என சர்வதே...