ஒக்டோபரில் வாக்காளர் பெயர்ப் பட்டியல் உறுதிசெய்யப்படும்- மேலதிக தேர்தல் ஆணையாளர்!
Saturday, September 30th, 2017
2017 ஆம்ட ஆண்டு திருத்தப்பட்ட வாக்காளர் பெயர்ப் பட்டியல் அடுத்த மாதம் 12ஆம் திகதி உறுதி செய்யப்படும் என்று தேர்தல்கள் செயலகத்தின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெயர்ப் பட்டியல் இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட இருந்தது. எனினும், மாவட்டமட்டத்தில் உதவி தேர்தல் ஆணையாளர்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட வேண்டி இருப்பதனால், சற்று காலதாமதமானது என்று குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இடம்பெறும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கு 2017 புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பயன்படுத்தப்படும் என்று திரு மொஹமட் மேலும் தெரிவித்தார்
Related posts:
அரசியலமைப்பை மீறும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படாது - பதில் ஜனாதிபதி ரணில் விக்கி...
ஜனாதிபதி மாளிகையில் இருந்த 17.5 மில்லியன் வந்தது எப்படி? - கோட்டாபயவின் சட்டத்தரணி வாக்குமூலம்!
நாடு வீழ்ச்சியடைந்த போது எதிர்க்கட்சிகள் ஒளிந்துகொண்டனர் - நாட்டை மேம்படுத்த முன்னிற்பதிலும் அரசியல்...
|
|
|


