இலங்கை வான் படையின் 70 ஆவது ஆண்டு நிகழ்வுகளில் 23 இந்திய வானூர்திகள் பங்கேற்பு!

Monday, March 1st, 2021

இலங்கை வான் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய வான்படை மற்றும் இந்திய கடற்படையின் 23 வானூர்திகள் இலங்கை  வந்தடைந்துள்ளன.

சாரங் ரக உலங்கு வானூர்தி, ஏரோபாட்டிக் கண்காட்சி போர் வானூர்தி, தேஜாஸ் பயிற்சி மற்றும் டோர்னியர் கடல்சார் ரோந்து வானூர்தி என்பனவே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கையில் முதன்முறையாக 2021 மார்ச் 03 – 05 ஆம் திகதிவரை காலிமுகத்திடலில் பிரமாண்டமாக வானூர்திக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய வானூர்திகளும், இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் உள்நாட்டு தொழில்நுட்ப வலிமை மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: