கொவிட் 19 மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் இதுவே – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Sunday, June 13th, 2021

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 72 மணித்தியாள காலப்பகுதிக்குள் அல்லது 96 மணித்தியாளங்களில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் அறிக்கைகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சில தினங்களாக கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அறிவிப்புகள் காலதாமதமாவது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ் வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

சில மரணங்கள் தொடர்பான விடயங்கள் நீதி மன்றங்களில் நிலுவையில் இருந்ததன. அவற்றை நிறைவு செய்வதில் சில காலம் செல்வது வழமை. இவ்வாறான நிலைக்கு மத்தியலேயே இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இக்காலப் பகுதியில் அறிக்கையிடப்படாத மரணங்கள் தொடர்பாக அறிக்கைகளை முடிந்த வரையில் முழுமைப்படுத்த முயற்சித்தோம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

Related posts: