ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரை காட்டிக் கொடுத்த முஸ்லிம் மக்கள்!
 Monday, April 29th, 2019
        
                    Monday, April 29th, 2019
            
தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் நீண்டகாலமாக தொடர்புகளை கொண்டிருந்த சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பதுளை கிளை தலைவராக செயற்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய விசேட தேடுதலில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கொம்பனித்தெரு பள்ளிவாசல் ஒன்றில் கைப்பற்றப்பட்ட வாள்களுக்கு சமமான வாள் ஒன்றும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
42 வயதான உசைன் ருசேய்ர் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹெம்மாத்தகம, பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர், பதுளை பிரதேசத்தில் பால் மா விநியோகம் செய்து வரும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளை திருமணம் செய்துள்ளதுடன் பதுளையில் வசித்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் சுமார் 8 ஆண்டுகளாக தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார். இந்த அமைப்பு இரண்டாக பிளவுப்பட்ட பின்னர் சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பதுளை மாவட்ட தலைவராக செயற்பட்டு வந்துள்ளார்.
சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பதுளை கிளையில் சுமார் 50 பேர் உறுப்பினர்களாக உள்ளதாகவும் அவர்கள் சம்பந்தமாகவும் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வு சேவைகளுக்கு கிடத்த தகவல்களுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது தொலைபேசி அழைப்புகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்லாம் மதத்திற்கு முரணாக அடிப்படைவாதத்தை கடைப்பிடிக்கும் அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வரும் நபர்கள் தொடர்பான தகவல்களை இஸ்லாத்தை சரியாக பின்பற்றும் மக்கள் பொலிஸாருக்கு வழங்கி வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        