எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட எவரும் மன்னாரில் இல்லை – பிராந்திய உதவி சுகாதாரப் பணிப்பாளர் !

Sunday, July 22nd, 2018

மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி தொற்றுநோய்ப் பரிசோதனையில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வரையில் கலந்துகொண்டிருந்த போதும் எவருக்கும் அந்த நோய் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை என்று மன்னார் பிராந்திய உதவி சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.என்.கில்றோய் பீரிஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் 10 இடங்களில் எச்.ஐ.வி தொற்றுநோய்க்கான பரிசோதனைகள் அண்மையில் இடம்பெற்றன. மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மன்னார் நகர மண்டபம், மன்னார் பெரியகமம் ரைமக்ஸ் காமன்ஸ் நிறுவனம், மன்னார் தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர்கள் படையணி அலுவலகம், பேசாலை வங்காலைப்பாடு தப்ரோபேன் கடலுணவு நிறுவனம் ,துள்ளுக்குடியிருப்பு நடுக்குடாகூல்மேன் ஐஸ் பெக்ரரி, மாந்தை மேற்கு அடம்பன் பிரதேச செயலகம், மடு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், சிலாபத்துறை பிரதேச வைத்தியசாலை ஆகிய 10 இடங்களிலேயே இந்தப் பரிசோதனைகள் இடம்பெற்றன. இதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

Related posts: