உள்ளூராட்சி வர்த்தமானிக்கு இடைக்கால தடை: உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட வாய்ப்பு!

பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட உள்ளுராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடங்கிய வரத்தமானி அறிவித்தல் செயற்பாட்டை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவொன்றை வெளியிட்டுள்ளது.
கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய, ஹாலிஎல ஆகிய உள்ளுராச்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பேர் குறித்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு இன்று மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிபதி குழு முன்னிலையில் ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி , இந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் மாதம் 4ம் திகதி வரை அமுலில் இருக்கும்.
Related posts:
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சு பதவியில் தொடர்வது தொடர்பில் இன்று முடிவு!
டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை - சிவில் விமான சேவை அதிகார சபை!
சுற்றுலாத்துறையூடாக 3 பில்லியனுக்கும் அதிக டொலரை வருமானமாக ஈட்ட முடியும் - சுற்றுலா அபிவிருத்தி அதிக...
|
|