ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  அமைச்சு பதவியில் தொடர்வது தொடர்பில் இன்று முடிவு!

Monday, April 9th, 2018

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த, ஸ்ரீலங்கா சுத்திர கட்சியின் அமைச்சர்களுடன் இணைந்து தொடர்ந்தும் அரசாங்கத்தை நடத்த முடியாது என ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கட்சியின் நிலைப்பாடு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும், கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர, வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளதுடன் அந்த கூட்டத்தின் பின்னர் அமைச்சு பதவிகளில் இருப்பதா இல்லையா என்பது குறித்து இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் அமைச்சரவையில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

.அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் புதிய நிர்வாகிகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்படுவர்.எனவே எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து புதிய நிர்வாகிகளுடன் ஐக்கிய தேசிய கட்சி பயணிக்கும்.அத்துடன் இளைஞர்களுக்கு கட்சியில் அதிக வாய்ப்புக்களை வழங்கவும் கட்சி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.

Related posts: