சுற்றுலாத்துறையூடாக 3 பில்லியனுக்கும் அதிக டொலரை வருமானமாக ஈட்ட முடியும் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை!

Saturday, March 25th, 2023

சுற்றுலா தொழில்துறை ஊடாக எதிர்காலத்தில் 3 பில்லியனுக்கும் அதிக டொலரை நாட்டின் பொருளாதாரத்திற்காக ஈட்ட எதிர்பார்ப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை வளர்ச்சியை காட்டுவதாக அந்த அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 2 இலட்சத்து 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்.

பெப்ரவரி மாதத்தில் ஒரு இலட்சத்து 522 பேர் நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை - இ...
யாழ் மாநகர சபையின் ஒத்துப்போக முடியாது- தவறுக்கு மன்னிப்பு கோரினால் தொடர்ந்து ஆதரவு- முன்னாள் முதல்வ...
புதுப்பிக்கத்தக்க சக்திக்கு இடமளிக்கும் திட்டங்களுக்கு மின்சார சபை அனுமதிக்கிறது - அமைச்சர் காஞ்சன வ...