உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று காலை கையெழுத்திட்டுள்ளார்.
இந்த திருத்தச்சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.சபாநாயகர் சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளதால், அது தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.
இதனடிப்படையில், தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி சபைத் தேர்தலை துரிதமாக நடத்தவுள்ளது.எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.சட்டமூலம் நிறைவேற்றப்படுவது தாமதமானதால், நாட்டில் உள்ள சகல உள்ளூராட்சி சபைகளும் விசேட ஆணையாளரின் கட்டுப்பாட்டில் உள்ளது
Related posts:
கொரோனா சிகிச்சை முறை எதற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!
FIFA உலகக் கிண்ண கலந்துகொள்ள வரும் இரசிகர்களை இலங்கைக்கு ஈர்க்க அரசாங்கம் நடவடிக்கை!
செஸ் வரி அதிகரிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது - நிதி இராஜாங்க அமை...
|
|