செஸ் வரி அதிகரிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, November 17th, 2022

இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 630 இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்தப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட செஸ் வரியானது கடந்த 15 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் அதிபர் என்ற வகையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, செஸ் வரியை மீளாய்வு செய்வதற்கான உத்தரவை ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.

எனினும் இந்த செஸ் வரி அதிகரிக்கப்பட்டாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய கூறியுள்ளார்.

குறிப்பாக நாட்டில் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களாக பட்டியலிடப்பட்ட 120 பொருட்களுக்கு இந்த செஸ் வரி அதிகரிப்பு பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை லங்கா சதோச விற்பனை நிலையங்களில், அந்த வகையில் உள்ளூர் சிவப்பு பச்சை அரிசி, 05 ரூபாவால் குறைக்கப்பட்டு, 205 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலையானது 09 ரூபாவால் குறைக்கப்பட்டு, 389 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் விலையானது 45 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் 425 கிராம் நிறைகொண்ட தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் புதிய விலையானது 540 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

000

Related posts: