FIFA உலகக் கிண்ண கலந்துகொள்ள வரும் இரசிகர்களை இலங்கைக்கு ஈர்க்க அரசாங்கம் நடவடிக்கை!

Monday, October 10th, 2022

டோஹாவில் நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண கலந்துகொள்ள வரும் இரசிகர்கள் தங்குவதற்கு ஏற்ற இடமாக நீர்கொழும்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

நவம்பர் 20 ஆம் திகதிமுதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் மொத்தம் 64 போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு 32 அணிகள் மோதுகின்றன.

டோஹாவில் குறைந்த அளவு தங்குமிட வசதிகள் இருப்பதாலும், மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் அதிக செலவுகள் காரணமாகவும் இரசிகர்களை கவர இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

டுபாய், அபுதாபி பிரபலமான சுற்றுலாத் தலங்களாக இருந்தாலும், இலங்கையில் குறைந்த விலையில் தங்கும் செலவுகள் உட்பட இதர செலவுகள் காரணமாக ரசிகர்களை ஈர்க்க முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை கொண்டுள்ளார்.

குறிப்பிட்ட நாடுகளின் போட்டிகள் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் வித்தியாசமான சூழ்நிலையை அனுபவிக்க இலங்கைக்கு பயணிக்க போதுமான நேரம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கடந்த கால சவால்களை எதிர்கொள்ள புதிய ஆண்டு வாய்ப்பளிக்கும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபத...
நிலநடுக்கத்திற்குப் பின்னர் 5 மீற்றர் நகர்ந்த துருக்கி - அறிவியலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது - கொழும்பு பல...