கொழும்பு டிக்கோவிற்ற துறைமுக செயற்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் அதிகாரிகள் ஆராய்வு!

Friday, May 1st, 2020

கொழும்பு டிக்கோவிற்ற துறைமுகத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் அதிகாரிகள் நேரடியாக சென்று அவதானித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்டுத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய இன்று (01.05.2020) குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற பலநாள் கலங்களில் இருந்து இறக்கப்படுகின்ற மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதிக்கு தயார்ப்படுத்துவதில் எதிர்கொள்ளக் கூடிய அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதே இன்றைய விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

அதேவேளை, பேலியகொட மீன்சந்தைக்கும் இ்ன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சி்ன் அதிகாரிகள் சந்தையின் செயற்பாடுகளையும் நேரடியாக அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: