உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் இறைவரிச் சட்டத்தை திருத்த நடவடிக்கை!
Monday, August 21st, 2017
உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பின்படி உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வரைபு சட்ட மூலத்தில் சில சரத்துகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை பெறப்படவேண்டும். அத்துடன், அந்த சரத்துகள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சட்டமூலத்தில் காணப்படும் ஒருசில முரண்பாடான சரத்துகளை நீக்குவதற்கும் அதன்பின்னர் அதனை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், உயர்நீதிமன்ற நீதியரசர்களான அனில் குணரத்ன, நளின் பெரேரா ஆகியோர் அடங்கிய ஆயமே இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கின்றது. 2006ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் குறித்து ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அதில் செய்யப்பட வேண்டிய ஒருசில மாற்றங்களைப் பற்றி பரிந்துரை செய்திருக்கின்றது எனவும்,
அந்த மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னர் அது நாடாளுமன்றத்துக்கு செப்டம்பர் மாத ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


