உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
Saturday, July 15th, 2017
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பரீட்சை அடுத்த மாதம் 8ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 3 லட்சத்து 15 ஆயிரத்து 27 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். இதில் 2 லட்சத்து 37 ஆயிரத்து தொள்ளாயிரத்து 43 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள்.
பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் அனுப்பப்பட்டுள்ளன. மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் அவசியப்படுமாயின் பரீட்சைகள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். எதிர்வரும் 20ஆம் திகதியுடன் இதற்கான கால எல்லை முடிவடைகிறது.
உயர்தரப் பரீட்சை பற்றி மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இன்று விளக்கம் அளிக்கப்படவுள்ளது. பாதுகாப்புப் பிரிவினருக்கு இது பற்றிய அடுத்த வாரம் விளக்கமளிக்கப்படும்.
உயர்தரப் பரீட்சையை ஆரம்பிப்பதற்கு முன்னர் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக்கும் வேலைத்திட்டமும் அமுற்படுத்தப்பட இருக்கின்றது. பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறியோர் ஐந்து வருடங்களுக்கு பரீட்சையில் தோற்ற முடியாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார மேலும் தெரிவித்தார்..
Related posts:
|
|
|


