நீரிழிவு நோயைத் தடுக்கக்கூடிய புதிய நெல்லினம் இலங்கையில்!

Friday, July 27th, 2018

நீரிழிவு நோயைத் தடுக்கக்கூடிய புதிய நெல்லினத்தை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. நீரிழிவு நோய் முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நிலையிலேயே இந்த புதிய நெல்லினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய நெல் இனத்துக்கு நிரோஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.

குறைந்தளவு கிளைசிமிக் அளவைக் கொண்ட சிவப்பு பாஸ்மதி வகையைச் சேர்ந்த இந்த நெல் குறைந்தளவு மாச்சத்தைக் கொண்டிருப்பதால் குருதியில் சீனியின் அளவைக் குறைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வுpவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகத்துக்கு கடந்த 21 ஆம் திகதி சென்று இந்த புதிய நெல்லினத்தின் அறுவடையை பார்வையிட்டார். வணிக ரீதியாக இந்த நெல்லினத்தை பயிரிட்டு விற்பனை செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts: