இலங்கை – பாகிஸ்தான் இரு தரப்பு வர்த்தக நடவடிக்கை!

Tuesday, May 1st, 2018

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து இரு தரப்பு வர்த்தக நடவடிக்கையை மேம்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிப்பதற்கு ஏற்ற இலக்கை நோக்கி தொழில்பட வேண்டும் எனவும்  இதனால் இரு நாடுகளினதும்,பொருளாதாரத்தை விருத்தி செய்ய முடியும் எனவும் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஷாஹிட் அகமட் ஹஷ்மற் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த கருத்தினை இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் யுத்தத்தை நிறைவிற்கு கொண்டு வருவதில் பாகிஸ்தான் போர்த்திற நடவடிக்கை சார்ந்த ஒத்துழைப்பினை வழங்கியது போல, தற்போது இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகளைமேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பாகிஸ்தான் இலங்கைக்கு 300 முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. அதேபோல, இலங்கை பாகிஸ்தானுக்கு 80 மில்லியன்அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை எதிர்வரும் சில வருடங்களில் சமநிலைக்கு கொண்டு வருவதில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும்பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Related posts: