இலங்கை நாணயப் பெறுமதி திடீரென அதிகரிப்பு!
Sunday, December 24th, 2017
தற்பொழுது இலங்கை நாணயப் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் நாணய மாற்றுவீத புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில்வீழ்ச்சியினைக் கொண்டிருந்த நிலையிலேயே இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 151 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு விற்பனைப் பெறுமதி 154.79 ரூபாவாக பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின்கொள்வனவு விலை 178.21 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்த நாணயப் பெறுமதி வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் உள் நாட்டில் பணப்பரிமாற்றம் மேற்கொண்டமை இறக்குமதியாளர்களின் டொலர் தேவை அதிகரித்தமைமற்றும் ஏற்றுமதியாளர்கள் டொலர்களை விற்பனை செய்தமை போன்ற காரணத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தில் நூற்றுக்கு 2.2 வீதம் ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


