இலங்கையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பு!

Saturday, April 28th, 2018

இலங்கையில் மூன்று திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இலங்கையில் மின் பற்றாக்குறை அல்லது அது தொடர்பான எந்வொரு சவாலுக்கும் முகம் கொடுப்பதற்கான நிலை ஏற்படப் போவதில்லை. எனினும் அதிகரிக்கும் மின்தேவையை கருத்திற் கொண்டு இலங்கையில் திரவ எரிவாயு (Liquefied natural gas) மின்னுற்பத்தி நிலையங்கள் மூன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் உதவியுடன் தலா 500 மெகாவொட் உற்பத்தித்திறன் கொண்டதாக குறித்த மின்னுற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மேலும் தென்கொரியாவுடன் திரவமாக்கப்பட்ட எரிவாயுவை தடையின்றி பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தமொன்று செய்து கொள்ளப்படவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: