அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது எமக்கு பூரண நம்பிக்கை – கூட்டமைப்பு எம்.பி சித்தார்த்தன் கருத்து!

Wednesday, April 21st, 2021

கடற்றொழில் அமைச்சர் கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மிகவும் அக்கறையானவர். அதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கும் விடயங்களை முன்னெடுக்க மாட்டார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் ஒருவர், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப் போவதாக கடற்றொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

“அவர்களிடம் கட்டணம் அறவிட்டு அந்த கட்டணத்தை எங்களுடைய மீனவர்களுக்குக் கொடுக்க முடியும் எனச் சொல்லியிருக்கிறார்.

அதனை ஒரு சிந்தனையாகத் தான் சொல்லியிருக்கின்றார். அதை ஒரு திட்டமாகச் சொல்லவில்லை என தொலைக்காட்சி ஒன்றில் சொல்லியிருக்கின்றார். அவர் தனது சிந்தனையைச் சொல்லியுள்ளார். மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வருகின்றது.

அவர் இந்த துறை மக்களில் மிகவும் அக்கறையானவர். அவர் இரண்டாவது முறை அதனைச் சிந்திப்பார் என நம்புகின்றேன். அதனால் அதனை நடைமுறைப்படுத்துவார் என நான் நம்பவில்லை.

இந்தியாவில் உள்ள மீனவர்கள் என்று சொல்லுகின்ற போது முதலாளிமார் அதிக பணத்தைக் கொடுத்து மீன்பிடிப்பார்கள். ஏழை கடற்றொழிலாளர்கள் நன்மையடைவார்கள் என்று நம்பவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: