இலங்கையில் ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தினம்!
Wednesday, January 17th, 2018
ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தினத்தை கொண்டவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நடைபெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய ரோயல் குடும்பத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன் இந்த சுதந்திர தினத்தில் புதிய சின்னம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று கொழும்பு மாநகராட்சி சபையின் கலாசார மற்றும் இசை நிகழ்ச்சிகள் காலி முகத்திடலில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சூழ்நிலைகருதி மாவட்டங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் - பிரதி...
கடுமையான பொருளாதார நெருக்கடி - ஒரு வருடகாலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சர்கள் தீர்மானம் !
பாதாள உலகக் குழுக்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் - பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்க...
|
|
|


