இலங்கைக்கு அபாய எச்சரிக்கை!

Monday, October 30th, 2017

நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது பெய்யும் அடை மழையுடன் மின்னல் ஏற்படும் என்பதனால் உயிராபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் பருவ மழை பெய்வதனால் மின்னலின் தாக்கங்கள் அதிகரித்து காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரங்கள் அற்ற பகுதியில் அதிகளவான மின்னல் தாக்கும் ஏற்படும் அபாயம் உள்ளதாக திணைக்களத்தின் இயக்குனர் சரம் பிரேமலால் தெரிவித்துள்ளார்.ஒரு மின்னலினால் சாதாரணமாக 25000 – 30000 எம்பியர் மின்சாரம் வெளியாகும். மின்னல் ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் இதனை அறிந்து கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மின்னல் மின்னுவதற்கு முன்னர் சற்று நேரம் வானம் இருள் சூழ்ந்து காணப்படும்.

அதிக மேகமூட்டம் காரணமாக குளிர் காற்று வீசும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெட்டாந்தரைகளில் இருந்து வெளியேறுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மரத்தின் கீழ் இருப்பதும் சரியா நடவடிக்கையல்ல. மரத்தின் ஊடாக மின்னல் உடலை இலகுவாக தாக்கும் அபாயம் உள்ளதாகவும் இயக்குநர் மேலும் தெரிவித்துள்ளார்.வீட்டில் இருக்கும் போது மின்னல் ஏற்படுவதனை குறைத்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.நேற்று மெதமுலன பகுதியில் மின்னல் தாக்கி ஒரே இடத்தில் மூவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: