ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து எவரையும் குற்றம்சாட்ட முடியாது – பேராசிரியர் சரத் அமுணுகம!
Monday, January 8th, 2018
சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டவர்களுக்கு தண்டணையளிக்க புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர, நாடாளுமன்றத்தில் ஒருமனதான வாக்குகள் கிடைக்கும் என, பேராசிரியர் சரத் அமுணுகம குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிணை முறி மோசடி தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து எவரையும் குற்றம் சுமத்த முடியாது எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் செவ்வாய்கிழமை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுடனான விஷேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது, குறித்த அறிக்கை தொடர்பில் கோரப்பட்டுள்ள பாராளுமன்ற விவாதம் பற்றி கலந்துரையாடப்படவுள்ளது.
Related posts:
இலங்கையில் இன்று துக்கதினம்!
இலங்கையின் கொரோனா தொடர்பான தற்போதைய நிலைவரம்!
ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உள்ளக தகவல்கள் கசிவு - விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொது...
|
|
|


