அராலி கடற்கரையில் சுற்றுலாத்தலம் 100 மில்லியன் ரூபாவில் கருத்திட்டம்!

Tuesday, June 5th, 2018

அராலி – யாழ் பிரதான வீதியில் நவீன சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான கருத்திட்ட முன்மொழிவு ஒன்று வலி. மேற்கு பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அராலி பாலத்திற்கு அருகில் இதற்கான முக்கோண பிரதேசத்தில் கடற்கரையை அண்டியதாக புதிய சுற்றுலாத்தலம் உருவாக்குவதற்காக ரூபா 100 மில்லியன் நிதிக்கான கருத்திட்டம் முன்iவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வலி.மேற்கு பிரதேச சபையும் வலி.மேற்கு பிரதேச செயலகமும் இணைந்த வகையில் கருத்திட்டம் தயாரித்து சுற்றுலாத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இத்திட்டம் தொடர்பாக சுற்றுலா அமைச்சு மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதுடன் வலி.மேற்கு பிரதேச சபை இத்திட்டத்திற்காக 6 ஏக்கர் காணியை வலி.மேற்கு பிரதேச செயலகத்திற்கு வழங்க முன்வந்துள்ளது.

இதேவேளை சுழிபுரம் மேற்கு சவுக்கடி புளியந்துறையில் வெள்ளைக்கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் நவீன சுற்றுலாத்தலம் அமையவுள்ளது. இத்திட்டத்தை முன்னெடுக்க வலி.மேற்கு பிரதேச செயலாளர் திருமதி பொ.பிறேமினி 10 ஏக்கர் காணியை அடுத்தவாரம் வழங்கவுள்ளார். இதனையடுத்து வட மாகாண உள்ளுராட்சி அமைச்சு ஏற்கனவே ஒதுக்கியுள்ள 13 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான மதிப்பீடுகள் ஏற்கனவே உள்ளுராட்சி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: