யாழில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு புத்தளத்தில் அடைக்கலம் தந்தவர் டக்ளஸ் தேவானந்தா – எமது ஆதரவு அவருக்கே என முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவிப்பு!

Thursday, July 23rd, 2020

1990 ஆம் ஆண்டு காலப்பகுதில் யாழ்ப்பாணத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு புத்தளத்தில் வீடு அமைத்து தந்து  வாழ வழிவகுத்தவர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா என யாழ் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்தனர் .

யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில் – யாழ்ப்பாணத்திலிருந்து இரவோடிரவாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தில் தங்க இடமின்றி  பரிதவித்த  போது அம்மக்களின் நிலையறிந்து தேவா நகர் மாதிரி கிராமத்தை தனி ஒருவராகச் செயற்படுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா.

யாருமற்ற அநாதைகளாக நின்றபோது புத்தளம் பகுதியில் உள்ள தில்லை அடிப்பகுதியில் 23 மாதிரி கிராமங்களை அமைத்து அங்கு வாழும் முஸ்லிம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து நம்மையும் சக மனிதர்கள் போல் வாழ வழி வைத்த   தோழர் டக்ளஸ் தேவானந்தா வுக்கு முஸ்லீம் சமூகம்  கடமைப்பட்டவர்களாக உள்ளனர்.

ஆகவை தற்போது யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ள முஸ்லிம்களாகிய நாங்கள் நன்றி மறவா தன்மையுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிக்கு வாக்களித்து டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நன்றிக்கடனை செலுத்த வேண்டுமென முஸ்லிம் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related posts: