நெற்செய்கைக்காக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Friday, January 12th, 2024

நெற்செய்கைக்காக இந்த வருடம் முதன்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில்,

அதன் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களானன அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல், பொலன்னறுவை, வவுனியா மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு நூறு ஆளில்லா விமானங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது கட்டத்தின் கீழ், நெல் பயிரிடப்படும் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள 563 விவசாய சேவை மையங்களுக்கு தலா ஒரு ஆளில்லா விமானத்தை வழங்குவதாகவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவும், நெல் விதைக்கவும், நெற்பயிர்களை அளக்கவும், நோய்களைக் கண்டறியவும் முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவானால் வெள்ள அபாயம் ஏற்படும் - இரணைமடு வடிநில பகுதி ...
தமிழ் இளைஞர்களை பலவந்தமாக போராளிகளாக்கியவர்கள் இன்று மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர் - அமைச்சர் ...
15 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி - இவ்வாரம் ஜனாதிபதி ஆலோசனை வழங்குவார் என இராணுவத் தள...