100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவானால் வெள்ள அபாயம் ஏற்படும் – இரணைமடு வடிநில பகுதி மக்களுக்கு அனர்த்தமுகாமைத்தவப் பிரிவு எச்சரிக்கை!

Tuesday, December 22nd, 2020

இரணைமடு குளத்தின் நீரேந்து பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக இரணைமடு வடிநில பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 33 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளதுடன் வளிமண்டலவியல் திணைக்களம் மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கலாம் எனக் கூறி உள்ளது.

இதன் பிரகாரம் முரசுமோட்டை, பன்னங்கண்டி, மருதநகர் , ஊரியான், கண்டாவளை மற்றும் கனகராயன் ஆற்றின் ஓரப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சில வேளைகளில் மழை வீழ்ச்சியின் தன்மையை பொறுத்து இன்று அல்லது நாளை வான் கதவுகள் திறப்பதற்கான சாத்தியப்பாடு உள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: