எமக்கு எதுவித தொடர்பும் கிடையாது – வேலணை பிரதேச சபையிடம் தன்னார்வத் தொண்டு அமைப்புக்கள் விளக்கம்!

Saturday, August 4th, 2018

வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கியதாக வெளியிடப்பட்ட அநாமதேய துண்டுப்பிரசுரம் தொடர்பில் தமக்கு எதுவிதமான தொடர்பும் கிடையாதென அநாமதேய துண்டுப்பிரசுரத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட தன்னார்வத் தொண்டு அமைப்புகள் சபையினரிடம் தெரிவித்துள்ளன.

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் சபையின் விஷேட அமர்வு நேற்றையதினம் கூடியது. இதன்போதே குறித்த தகவலை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

புங்குடுதீவுக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள் சர்வோதயம் என்னும் அமைப்பிடம் இலஞ்சம் பெற்றது தொடர்பாக வெளியிடப்பட்ட அநாமதேய துண்டுப்பிரசுரம் தொடர்பில் கடந்த இரண்டு அமர்வகளில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் சபையின் விசேட அமர்வின்போது விசாரணைக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தில் கலந்து கொண்ட  தன்னார்வ அமைப்பகளான புங்குடுதீவு உலகமையம் சூலகம் அமைப்பு பசுமைப்புரட்சி அமைப்பு ஆகியவற்றின் தலைவர்கள் செயலாளர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு தமது கருத்தக்களை தெளிவுபடுத்தியிருந்தனர்.

இதன்போது தமது அமைப்புக்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் பிரதேச சபைக்கும் சபையின் கௌரவ உறுப்பினர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே குறித்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதனை தாம் சார்ந்த அமைப்புக்கள் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன்போது  குறித்த சர்ச்சைகளுக்கு காரணமாக உறுப்பினர் கருணாகரன் நாவலன் இந்தத் துண்டுப்பிரசுரத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை எனவும் எனினும் கடந்தகாலங்களில் தன்னால் இழைக்கப்பட்டதென தான் கருதும் தவறுகளுக்காகவும் சபையில் தான் உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்த தவறான வார்த்தைப்பிரயோகங்களுக்காகவும் சபையிடம் வெளிப்படையாக மன்னிப்புக்கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: