நிதி முகாமைத்துவத்தின் தூய்மையை அரசாங்கம் பாதுகாத்து செயற்படுகிறது – ஜனாதிபதி

Tuesday, July 18th, 2017

நிதி முகாமைத்துவத்தின் தூய்மையும் வெளிப்படைத் தன்மையையும் பாதுகாத்து தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஆரம்பமான நிதி தூய்மையாக்கல் ஆசிய பசுபிக் வலயத்தின் 20வது வருடாந்த மாநாட்டில் அவர் உரையாற்றினார். 41 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஆரம்பமான இந்த மாநாடு எதிர்வரும் 21ம் திகதி வரை கொழும்பில் நடைபெறும்

நிதி தூய்மையாக்கல் என்ற சவாலை எதிர்கொண்டிருக்கும் நாடு அதற்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய நேர்மையாக செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

நிதி தூய்மையாக்கலை தடுப்பதன் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரம் வலுவடையும். சர்வதேச மட்டத்திலான நிதி முகாமைத்துவத்திற்கு இது உதவும் அரச நிதி முறைகேடு, நிதி தூய்மையாக்கல் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் சட்ட ரீதியான நிறுவன்களை அமைத்துள்ளது. வினைத்திறனான முறையில் இவை செயற்பட்டு வருவதாகவும்; ஜனாதிபதி கூறினார்.

நிதி தூய்மைக்காலின் மூலம் பயங்கரவாதிகளுக்கு பாரியளவிலான நிதி செல்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள், ஒப்பந்தங்கள் என்பனவற்றை பின்பற்றி முறையான விதத்தில் செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார்.

நிதி தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைமைத்துவம் 2018ம் ஆண்டு வரை இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதனால் இந்த மாநாடு இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நிதி தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுவின் உறுப்பு நாடுகள் நிதி தூய்மையாக்கல், பயங்கரவாத்திற்கு நிதியளித்தல் என்பனவற்றை தடுப்பதற்காக சர்வதேச நிதி பணியகங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.

Related posts: