அமெரிக்காவின் கைக்கு மாறுமா நில அளவைத் திணைக்களம்!
Tuesday, June 13th, 2017
இலங்கை நில அளவைத் திணைக்களத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்க தயாராகி வருவதாக, அரச நில அளவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை விரைவில், அமைச்சரவையில் சமர்ப்பிக்க காணி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக, அச் சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகம சுட்டிக்காட்டியுள்ளார்.
காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க இருந்த காலத்தில், இதுபோன்ற அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் எழுந்த எதிர்ப்புக் காரணமாக அது நிராகரிக்கப்பட்டது.
எதுஎவ்வாறு இருப்பினும், தற்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, நில அளவைத் திணைக்களத்தை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடுடன் இருப்பதாக, அரச நில அளவையாளர்கள் சங்கத் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
நீதிமன்றில் ஆஜராகுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு!
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மருத்துவமனை சார்ந்த சாட்சியங்களை அனைத்து மாகாணங்களிலும் ஒளிப்பதிவு செ...
அஸ்வெசும திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணை - வடக்கில் நிறைவு செய்யப்பட்டடள்ளதாக நிதி இரா...
|
|
|
எதிர்வரும் ஆண்டளவில் கிராம மற்றும் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறை வளர்ச்சி அடையும் – அமைச்சர் ந...
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து ஆலோனை - சுகாதார அ...
கன்சர்வேட்டிவ் கட்சி நடைபெறவுள்ள தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்கும் - ‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’...


