அஸ்வெசும திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணை – வடக்கில் நிறைவு செய்யப்பட்டடள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!!

Wednesday, February 14th, 2024

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள், முதலாவதாக வடக்கு மாகாணத்திலேயே நிறைவு செய்யப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது.

கொழும்பில் அமைந்துள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துக்கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,

“அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டச் செயற்பாடுகளை இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளோம்.

பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்களின் ஒத்துழைப்புடன் இதனை நாம் முன்னெடுத்துள்ளோம்.

இந்த திட்டத்திற்கு மாகாண சபைகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இன்றைய கலந்துரையாடல ஆரம்பித்துள்ளோம்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்ட நடவடிக்கையின் போது 1.1 மில்லியன் மேன்முறையீடுகள் நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்றன.

அவற்றில் வடக்கு மாகாணமே முதலாவதாக மேன்முறையீட்டு விசாரணைகளை நிறைவு செய்துள்ளது” என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: