டீசலுக்கான உற்பத்தி வரி அதிகரிப்பால் 2 பில்லியன் நட்டம்!

Tuesday, September 20th, 2016

 

ஒரு லீற்றர் டீசலுக்கான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் மாதாந்தம் 2பில்லியன் ரூபாய் வரை நஸ்டம் ஏற்படுவதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய நிதி அமைச்சினால் கடந்தஆகஸ்ட் 20ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசலுக்கான சில்லறை விலைஅதிகரிக்கப்படாமல் டீசலுக்கான வரி மூன்று ரூபாவால் உயர்த்தப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

இதன்படி 10 ரூபாவாக இருந்த குறித்த வரி 13 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. எனினும் டீசலினால் ஓரளவு லாபம் கிடைத்துள்ள போதும் பெற்றோலால் நஸ்டமேஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியசெவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

diesel-659965

Related posts: