தொடரும் வறட்சியான காலநிலை – மின்னுற்பத்தி குறையலாம் என ஆரூடம்!

Saturday, March 16th, 2024

மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சுமார் 70% வரை குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்க முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த நாள்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ள போதிலும், தினசரி நீர் மின் உற்பத்திக்கு தற்போது எந்த தடையும் இல்லை என அவர்கள் மேலும்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் வெளிமாவட்டத்தில் தகனம் – பணிப்பாளர...
அரசாங்கத்தை விமர்சிப்பது மக்களின் உரிமை - எதிர்ப்பு நடவடிக்கையின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப...
முச்சக்கரவண்டி கவிழ்ந்து கோர விபத்து – யாழ்ப்பாணத்தில் 11 முன்பள்ளிச் சிறுவர்கள் வைத்தியசாலையில் அனு...