அனைத்து பாடசாலைகளிலும் அனைத்து மத அனுஸ்டானங்ள் -முன்னாள் ஜனாதிபதி

Sunday, April 30th, 2017

இலங்கயில் சகோதரத்துவம் மிளிர வேண்டுமானால் முதலில் சிங்கள தமிழ் சிறுவர்கள் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக்கா குமாரதுங்க தெரவித்துள்ளார்.

போர் வெற்றி மட்டும் வெறுமனே  இந்த நாட்டில் சமாதனத்தை ஏற்படுத்தாது போரின் வெற்றியானது உண்மையான சமாதானத்தின்  மூலம் உறுதிப் படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கம்பகா ஆகிய மாவட்ட சிறார்கள் சக தமிழ் சிறார்களுடன் உரையாட முடியாமல் இருப்பதையும் அதே போல் வட கிழக்கு மாகாண தமிழ் சிறார்கள் சக  சிங்கள மாணவர்களுடன் சகஜமாக உரையாட முடியாமல் இருபதனையும் தான் அவதானித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனைத் தெரவித்த அவர் நாட்டிலுள்ள அணைத்து பாடசாலைகளிலும் அணைத்து மத பண்டிகைகளும் அனுஸ்டிக்கப் படவேண்டும்  எனவும் இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை தான் ஆரம்பித்துள்ளதாகவும்  சந்திரிகா தெரிவித்தார்.

Related posts: